வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: ஆசிய சாம்பியனை டிரா செய்தது இந்தியா

DIN | Published: 11th September 2019 02:40 AM


உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை 0-0 என டிரா செய்தது இந்தியா.
பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் 2022-இல் கத்தாரில் நடைபெறவுள்ளன. இதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் போராடி தோற்றது.
இதன் தொடர்ச்சியாக டோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  2-ஆவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆசிய சாம்பியன் கத்தாருடன் மோதியது இந்தியா.  வலுவான தற்காப்பு ஆட்டத்தால், கத்தாரின் கோலடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். கேப்டனாக செயல்பட்ட குர்ப்ரீத் சிங் சாந்து அற்புதமாக செயல்பட்டு எதிரணியின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார். அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

இந்திய ஏ அணிக்கு எதிராக 150 ரன்கள் குவித்தார் மார்க்ரம்!
டி20: புதிய சாதனை நிகழ்த்தியுள்ள விராட் கோலி!
டி20: விராட்டிடம் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
உலக ஆடவர் குத்துச்சண்டை அரையிறுதியில் அமித் பங்கால், மணிஷ்
உலக மல்யுத்தம் வினேஷ் போகட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி