செய்திகள்

பெடரரின் சாதனையை நோக்கி முன்னேறும் ரபேல் நடால்

7th Sep 2019 01:29 AM | - பா.சுஜித்குமார்

ADVERTISEMENT


ஜாம்பவான் ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் சாதனையை நெருங்குவாரா மற்றொரு ஜாம்பவான் ஆன ரபேல் நடால் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கால்பந்து ஆட்டத்துக்கு அடுத்தபடியாக உலகளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள விளையாட்டு டென்னிஸ் ஆகும். செல்வந்தர்களின் ஆட்டமாக கருதப்படும் டென்னிஸில் ஆஸ்திரேலிய, பிரெஞ்சு, யுஎஸ் ஓபன், விம்பிள்டன் உள்ளிட்ட 4 போட்டிகள் மிகவும் முக்கியமானவை. இவை கிராண்ட்ஸ்லாம் பந்தயங்கள் என அழைக்கப்படுகின்றன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிச், ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் தான் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் முர்ரே இடுப்புமுறிவு காயத்தால் சரிவர ஆட முடியாமல் ஒதுங்கி பின்னர் ஆட வந்துள்ளார்.
பெரும்பாலான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இவர்கள் நால்வரே தங்களுக்குள் அதிகம் பகிர்ந்துள்ளனர்.
இதில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 20, ரபேல் நடால் 18, ஜோகோவிச் 16 முறையும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளனர்.
ரோஜர் பெடரர் 37 வயதாகி விட்டதால், அண்மைக் காலமாக பெரும்பாலான போட்டிகளில் அரையிறுதிச் சுற்றோடு தோற்று வெளியேறி விடுவது வழக்கமாகி உள்ளது.

நடால்-ஜோகோவிச் மோதல்: அதே நேரத்தில் உலகின் நம்பர் ஒன் வீர் ஜோகோவிச்சுக்கும், நடாலுக்கும் இடையே பெடரரின் கிராண்ட்ஸ்லாம் சாதனையை அடைவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. 
18 பட்டங்களுடன் நடால்:  ஆஸி. ஓபன் 2009, பிரெஞ்சு ஓபன்-2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019 என 12 முறையும், விம்பிள்டனில் 2008, 2010 என இரண்டு முறையும், யுஎஸ் ஓபனில் 2010, 2013, 2017-இலும் வென்றுள்ளார்.
ஸ்பெயினின் மனகார் பகுதியில் 1986-இல் பிறந்த நடாலின் தற்போதைய வயது 33 ஆகும். எனினும் தொடர்ந்து ஆடி வருவதால், காயங்களாலும் அவதிப்பட்டு வருகிறார் நடால். கடந்த 2018 யுஎஸ் ஓபன் போட்டியில் காயத்தால் இடையிலேயே வெளியேற நேர்ந்தது. 
முழு பார்மில் உள்ளார்: இந்நிலையில் தற்போது யுஎஸ் ஓபன் 2019 போட்டியில் அபார பார்முடன் ஆடி வருகிறார். முதல் சுற்றில் ஜான் மில்மேன், இரண்டாம் சுற்றில் கொக்கினாகிஸ், மூன்றாம் சுற்றில் சுங் ஆகியோரை நேர் செட்களில் வீழ்த்தினார். ரவுண்ட் 16 சுற்றில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிக்கிடம் மட்டும் 1 செட்டை இழந்து வெற்றி பெற்றார். காலிறுதியில் ஆர்ஜென்டீனா வீரர் ஸ்வாட்ர்ஸ்மேனையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற நடால், இத்தாலி வீரர் பெர்ரடனியிடம் மோத உள்ளார்.

மீண்டும் நம்பர் ஒன் அந்தஸ்து:  தற்போது ஜோகோவிச் உலகின் நம்பர் ஒன் வீரராக உள்ளார். யுஎஸ் ஓபனில் நடால் வென்றால், 2000 ரேங்கிக் புள்ளிகளை பெறும் நடாலுக்கும், ஜோகோவிச்சுக்கும் இடையே 640 புள்ளிகள் மட்டுமே இடைவெளி உள்ளது.

ADVERTISEMENT

19-ஆவது பட்டம் வெல்ல வாய்ப்பு
18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், இதிலும் பட்டம் வென்றால் 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அதற்கு அடுத்து மேலும் ஒரு ஆட்டத்தில் நடால் வென்றால், பெடரரின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
தற்போதைய யுஎஸ் ஓபன் போட்டியில் முன்னணி வீரர்கள் பெடரர், ஜோகோவிச் இல்லாத நிலையில் நடால் மட்டுமே களத்தில் உள்ளார்.
இதனால் பட்டம் வெல்ல அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT