செய்திகள்

டி20: இலங்கை அபார வெற்றி

7th Sep 2019 01:31 AM

ADVERTISEMENT


நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் கேப்டன் மலிங்கா ஹாட்ரிக்குடன் டி20யில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஏற்கெனவே நியூஸிலாந்து 2-0 என தொடரைக் கைப்பற்றியது. கடைசி ஆட்டம் பல்லகெலேவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலகா 30, நிரோஷன் டிக்வெலா 24, லஹிரு மதுசங்கா 20, ஹஸரங்கா 14 ஆகியோர் மட்டுமே ஒரளவு ரன்களை சேர்த்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாயினர். 
20 ஓவர்களில் 125/8 ரன்களை மட்டுமே எடுத்தது இலங்கை. நியூஸி தரப்பில் மிச்செல் சான்ட்நர், டாட் ஆஸ்லே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
லஸித் மலிங்காவிடம் வீழ்ந்த நியூஸி.: 126 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணியால் இலங்கை கேப்டன் மலிங்காவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்தனர். காலின் மன்றோவை 12, டிம் சைபெர்ட் 8 ரன்களுக்கு வெளியேற்றினார் மலிங்கா.
ஹாட்ரிக் சாதனை: பின்னர் ஹமிஷ் ரூதர்போர்ட்டை எல்பிடபிள்யு முறையிலும், கிராண்ட்ஹோமை போல்டாக்கியும், ராஸ்டெய்லரை எல்பிடபிள்யு ஆக்கியும் ஹாட்ரிக் சாதனை படைத்தார் மலிங்கா.
டேரில் மிச்செல் 6, சான்ட்நர் 16, ஸ்காட் 0, டாட் ஆஸ்ட்லே 3, செத் ரேன்ஸ் 8 ரன்களில் வெளியேறினர். கேப்டன் செளதி 28 ரன்களுடன் களத்தில் இருந்தார். 16 ஓவர்களிலேயே 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸிலாந்து. 
100 விக்கெட்: மலிங்கா சாதனை
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இலங்கை கேப்டன் மலிங்கா. இதன் மூலம் டி20 ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT