செய்திகள்

இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங் கவலை தருகிறது: விக்ரம் ரத்தோர்

7th Sep 2019 01:30 AM

ADVERTISEMENT


டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங் கவலை தருகிறது என புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.
இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுடன் டி20, டெஸ்ட் தொடர்களில் மோத உள்ளது. இந்நிலையில் சஞ்சய் பாங்கருக்கு பின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டார். 
அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  டெஸ்ட்டில் தொடக்க வரிசை பேட்டிங், மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மிடில் ஆர்டர் பேட்டிங் நிலை எனக்கு கவலை தருகிறது. 
ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். டெஸ்ட் தொடக்க வரிசைக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதில் வீரர்களிடம் ஆரோக்கியமான போட்டி உள்ளது. சரியான நிலைத்து ஆடும் இணையை தேர்வு செய்ய வேண்டும்.
50 ஓவர் ஆட்டங்களுக்கு ஷிரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே பொருத்தமானவர்கள். கடந்த சில ஆட்டங்களில் இருவரும் சிறப்பாக ஆடியுள்ளனர். அவர்களுக்கு உரிய ஆட்ட வாய்ப்புகளை தந்து ஆதரவு தர வேண்டும். தற்போதைய அணியில் அனைவருடனும் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது.
ஏற்கெனவே ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர், கோலியுடன் பணிபுரிந்துள்ளேன். பேட்ஸ்மேன்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, அவர்களது ஆட்டத்தை மேம்படுத்த உதவுவேன். இதில் ஆட்கள் மேலாண்மை தான் முக்கியம். பஞ்சாப் அணியின் கேப்டனாக 6 ஆண்டுகள் இருந்து பின்னர் சில காலம் விலகி இருந்தேன். இந்த இடைவெளி என்னுள் புதிய நுட்பங்களை அறிய உதவியது. வீரர்கள் தங்கள் தவறுகள் குறித்து அச்சமில்லாமல் ஆடச் செய்வதே எனது நோக்கம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT