செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 161/2

7th Sep 2019 01:29 AM

ADVERTISEMENT


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் 4-ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை சேர்த்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 497/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி 211 ரன்களுடன் 3-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 
இந்நிலையில் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்களுடன் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை காலை முதல் உணவு வரை பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மைதானத்தில் பிட்ச் மற்றும் சுற்றுப்புறங்களை பணியாளர்கள் பாதுகாப்பாக மூடியிருந்தனர். மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடங்கியது.
ஜோ டென்லி 4, கிரெய்ஓவர்டன் 5 ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ்-கேப்டன் ஜோ ரூட் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 
பர்ன்ஸ் 4-ஆவது அரைசதம்: ரோரி பர்ன்ஸ் அற்புதமாக ஆடி தனது 4ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். 
47-ஆவது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எடுத்திருந்தது.
60 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161/2 ரன்கûளை எடுத்திருந்தது. ரோரி பர்ன்ஸ் 78, கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களுடன் களத்தில் 
இருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT