செய்திகள்

நாளையும் தொடரவுள்ள இந்தியா ஏ - தெ.ஆ. ஏ ஒருநாள் ஆட்டம்!

4th Sep 2019 05:59 PM | எழில்

ADVERTISEMENT

 

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 4-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக நாளையும் தொடரவுள்ளது.

மழை காரணமாக 25 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.

பிறகு விளையாடிய இந்திய ஏ அணி, 7.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை காலை 9 மணிக்கு ஆட்டம் தொடரவுள்ளது.

ADVERTISEMENT

Tags : India Dhawan Thiruvananthapuram South Africa A second day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT