செய்திகள்

அமெரிக்க ஓபன்: காலிறுதியில் ரோஜர் ஃபெடரர் வெளியேற்றம்

4th Sep 2019 10:02 AM | Raghavendran

ADVERTISEMENT

 

2019 அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தரவரிசையில் 3-ஆம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஜாம்பவான் வீரர் ரோஜர் ஃபெடரர் (38), தரவரிசையில் 78-ஆவது இடத்தில் உள்ள பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஃபெடரருக்கு டிமிட்ரோவ் கடும் சவால் அளித்தார். இறுதியில் கடுமையாகப் போராடிய கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் ஃபெடரர், 46-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பையும் இழந்து வெளியேறினார். 

Tags : Roger Federer Grigor Dimitrov US Open US Open quarterfinals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT