செய்திகள்

மிதாலி ராஜ் மகளிரின் முன்மாதிரியாக திகழ்கிறார்: சேத்தேஷ்வர் புஜாரா

4th Sep 2019 09:34 AM | Raghavendran

ADVERTISEMENT

 

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனையாக திகழும் மிதாலி ராஜ், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்கிழமை அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழும் சேத்தேஷ்வர் புஜாரா, மகளிருக்கான முன்மாதிரியாக திகழ்வதாக மிதாலி ராஜுக்கு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:

உங்கள் டி20 கிரிக்கெட் சகாப்தத்துக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நீங்கள் இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான மகளிரின் முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

36 வயதான மிதாலி ராஜ், 32 டி20 போட்டிகளுக்கு இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். மேலும் மகளிர் டி20-யில் 2 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் சாதனையைும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Cheteshwar Pujara Mithali Raj woman cricketer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT