செய்திகள்

4-ஆவது ஆஷஸ் டெஸ்ட்: அதிரடி மாற்றங்களுடன் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் அறிவிப்பு

4th Sep 2019 09:23 AM | Raghavendran

ADVERTISEMENT

 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளது. இதனால் 1-1 என இந்த தொடர் தற்போது சமனில் உள்ளது.

இந்நிலையில் 4-ஆவது டெஸ்ட் போட்டி மான்சஸ்டர் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணி வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் இரு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்ஸனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

மோசமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா, அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காயத்தால் விலகிய முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆடும் லெவனுக்கு திரும்பியுள்ளார். மேலும் ஸ்மித்துக்கு மாற்று வீரராக களமிறங்கிய லாம்பஷே 3-ஆம் நிலை வீரராக களமிறக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு:

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாம்பஷே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜாஷ் ஹாசில்வுட்.

கடந்த டெஸ்டில் த்ரில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோன்று வீரர்கள் வரிசையில், தொடக்க வீரர் ஜேஸன் ராய் நடுவரிசைக்கும், அங்கிருந்த ஜோ டென்லி தொடக்க வீரராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:

ராரி பர்ன்ஸ், ஜோ டென்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஜாஸ் பட்லர், கிரெய்க் ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேக் லீச்.

Tags : AUSvsENG ENGvsAUS Ashes Test Australia Cricket team England Cricket team
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT