செய்திகள்

யுஎஸ் ஓபன்: ஒஸாகா அதிர்ச்சித் தோல்வி: காலிறுதியில் நடால், வேகிக்

4th Sep 2019 01:10 AM

ADVERTISEMENT


யுஎஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் நவோமி ஒஸாகா அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் ஸ்விஸ் வீராங்கனை பெலின்டா பென்கிக் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ஒஸாகாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இத்தோல்வியால் ஒஸாகா முதலிடத்தை இழப்பார் எனத் தெரிகிறது. ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி முதலிடத்துக்கு முன்னேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 
குரோஷியாவின் வேகிக் 6-7, 7-5, 6-3 என ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸையும் வென்றார்.
ஆடவர் பிரிவில் நான்காம் சுற்றில் முன்னணி வீரர் ரபேல் நடால் 6-3, 3-6. 6-1, 6-2 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இளம் வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 3-6, 6-2, 6-4, 6-3 என ஸ்வார்ட்ஸ்மேனிடம் வீழ்ந்தார். பெர்ரெட்டனி 6-1, 6-4, 7-6 என நேர் செட்களில் ஆன்ட்ரே ருபலேவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். மோன்பில்ஸ் 6-1 6-2, 6-2 என அன்டுஜாரை வென்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT