செய்திகள்

முருகப்பா ஹாக்கி: தமிழகம் தோல்வி

4th Sep 2019 01:09 AM

ADVERTISEMENT


93-ஆவது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் தமிழகம் தோல்வியைத் தழுவியது.
போட்டியின் 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹாக்கி தமிழ்நாடு அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணி. தமிழகத் தரப்பில் ஜோஷ்வா, பஞ்சாப் சிந்து வங்கி தரப்பில் சத்பீர் சிங், ககன்பிரீத் சிங், பரவிந்தர் சிங் கோலடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவத்தை 4-1 என பஞ்சாப் நேஷனல் வங்கி தோல்வியுறச் செய்தது.
ராணுவ தரப்பில் ரஜ்னீஷ், பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் மந்தீப் மோர் 3 கோல்களையும், குர்ஜிந்தர் சிங் ஒரு கோலையும் அடித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT