செய்திகள்

துளிகள்...

4th Sep 2019 01:08 AM

ADVERTISEMENT

    மங்கோலியாவின் உலன்பாட்டார் நகரில் நடைபெறும் ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் தென்கொரியாவை 3-2 என்ற கேம் கணக்கில் வென்ற நிலையில், இறுதி ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.


    முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் உலக ஜூனியர் போட்டிக்கு தகுதி பெறும்.


    போபாலில் நடைபெற்று வரும் 73-ஆவது கிளென்மார்க் தேசிய சீனியர் நீச்சல் போட்டியில் கர்நாடக வீரர் ஸ்ரீஹரி நடராஜ் ஆடவர் 50 மீ, பேக்ஸ்ட்ரோக் பிரிவில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். ஏற்கெனவே அவர் 100 மீ. ப்ரீஸ்டைல் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார். 


    ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் எஃப்சி வரும் 2019-20 சீசனுக்காக பிரேசிலைச் சேர்ந்த மிட்பீல்டர் ரபேல் சிரிவெல்லோரோவை ஒப்பந்தம் செய்துள்ளது. 30 வயதான ரபேல் இதற்கு முன்பு போர்ச்சுலில் உள்ள சிடி பெய்ரென்ஸ் அணியில் ஆடியவர்.

ADVERTISEMENT


    2020 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்கள் டிராவில் முடிந்தால், ஐரோப்பாவில் பதில் ஆட்டங்கள் நடத்த உத்தேசம் ஏதுமில்லை என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) தெரிவித்துள்ளது. தகுதிச் சுற்றில் ஆடும் அணிகள் 2 முறை மோத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT