செய்திகள்

டி20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார் மிதாலி ராஜ்

4th Sep 2019 01:12 AM

ADVERTISEMENT


டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய மகளிர் ஒருநாள் அணியின் கேப்டனும், மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ்.
2021 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் கவனம் செலுத்த ஏதுவாக டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
36 வயதான மிதாலி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர். வரும் செப்டம்பர் 24-இல் உள்ளூரில் தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான அணியில் ஆட தயாராக உள்ளதாக கூறியிருந்தவர் தற்போது திடீரென ஓய்வு முடிவு அறிவித்துள்ளார்.
கடந்த 2006-இல் இருந்து இந்திய அணிக்கு டி20 ஆட்டங்களில் பங்கேற்ற அவர், 2021 உலகக் கோப்பைக்கு தயாராக ஏதுவாக இந்த முடிவை எடுத்துள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மிதாலி ராஜ் கூறியதாவது: மகளிர் உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் நோக்கம். அதற்காக சிறப்பாக ஆடவேண்டும். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்த பிசிசிஐ-க்கும், இந்திய டி20 அணி எதிர்காலத்தில் சிறந்த வெற்றிகளை பெறவும் வாழ்த்துகள் என்றார்.
மொத்தம் 2349 ரன்கள் குவிப்பு: 3 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய மிதாலி, மொத்தம் 2349 ரன்களை விளாசியுள்ளார். 
மேலும் இந்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் வசம் உள்ளது.
தொடக்க வரிசை வீராங்கனையான மிதாலி 203 ஒருநாள் ஆட்டங்களில் 6720 ரன்களை குவித்துள்ளார். 
கடந்த 2017 மகளிர் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு மிதாலி தலைமையில் முன்னேறிய இந்திய அணி துரதிருஷ்டவசமாக இங்கிலாந்திடம் தோற்றது. கடந்த 2018 டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் தோற்றவுடன் அவரது பெயர் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து டி20 அணியில் அவர் சேர்க்கப்படுவாரா 
என கேள்விக்குறி எழுந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT