செய்திகள்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: ஸ்மித்திடம் முதலிடத்தை இழந்தார் கோலி

4th Sep 2019 01:12 AM

ADVERTISEMENT


ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் முதலிடத்தை ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் இழந்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. பந்துவீச்சில் பும்ரா முதல் 3 இடங்களில் முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தரவரிசை பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.
இதன்படி செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸி. மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றினார். இதுவரை முதலிடத்தில் இருந்த கோலி 903 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 
ஆஷஸ் தொடரில் அடித்த 2 சதங்கள் மற்றும் 92 ரன்களுடன் ஸ்மித் முதலிடத்துக்கு திரும்பியுள்ளார். 
ஆனால் மே.இ.தீவுகள் தொடரில் முதல் டெஸ்டில் டக் அவுட், ஆனதால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார் கோலி.
ரஹானே 7-ஆம் இடத்துக்கு முன்னேறினார். ஹனுமா விஹாரி 40 இடங்கள் முன்னேறி 30-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
கடந்த 2015 முதல் முதலிடத்தில் இருந்த ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்டு ஓராண்டு ஆட முடியாமல் போனது, இதனால் முதலிடத்தை இழந்தார். உள்ளூரில் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கோலி சிறப்பாக ஆடினால் முதலிடத்தை பெறலாம்.
பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், காகிúஸா ரபாடாவுக்கு அடுத்து 3-ஆவது இடத்தில் உள்ளார் பும்ரா. மே,இ.தீவுகள் ஜேஸன் ஹோல்டர் 4-ஆவது இடத்துக்கு முன்னேறினார். முகமது ஷமி 18, இஷாந்த் 20 ஆவது இடங்களில் உள்ளனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT