செய்திகள்

உலக துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியா முதலிடம்: மானு-செளரவ் இணைக்கு தங்கம்

4th Sep 2019 01:10 AM

ADVERTISEMENT


ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய அணியினர் முதலிடம் பெற்று உள்ளனர். நிறைவு நாளான திங்கள்கிழமை மானுபாக்கர்-செளரவ் செளதரி இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கெனவே இந்திய அணியினர் பல்வேறு பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.
10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய நட்சத்திரங்கள் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை 17-15 என்ற புள்ளிக் கணக்கில் மற்றொரு இந்திய இணையான யஷ்ஹஸ்வினி-அபிஷேக் வர்மா இணையை வீழ்த்தியது. மேலும் 400-க்கு 394 புள்ளிகளையும் குவித்தனர்.
முதலில் 3-9 என பின்தங்கி இருந்த மானு-செளரவ் இணை, பின்னர் 7-13 என முன்னேறி, இறுதியில் 17-15 என வெற்றி பெற்றனர். யஸ்ஹஸ்வினி-அபிஷேக் இணை வெள்ளி  வென்றனர்.
அபூர்வி சந்தேலா-தீபக்குமாருக்கும் தங்கம்: கலப்பு ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா-தீபக்குமார் இணை தங்கப் பதக்கம் வென்றனர்.  இந்திய அணி 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.  நிகழாண்டு இதுவரை நான்கு கட்டங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தம் 16 தங்கம் உள்பட 22 பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா. 


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT