செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஓமனுடன் நாளை இந்தியா மோதல்

4th Sep 2019 01:08 AM

ADVERTISEMENT


2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஓமனுடன் வியாழக்கிழமை மோதுகிறது இந்தியா.
கத்தார் நாட்டில் 2022 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ஆசிய பிராந்தியத்துக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் நிலையில் கத்தார், ஓமன், இந்தியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவை குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதன் முதல் ஆட்டம் குவஹாட்டி இந்திரா காந்தி மைதானத்தில் வியாழக்கிழமை ஓமன்-இந்தியா இடையே நடக்கிறது. கத்தார், ஓமனை இதுவரை அதிகாரபூர்வ போட்டிகளில் இந்தியா வென்றதில்லை.  குவஹாட்டியில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறியதாவது: ஓமன் அணி நம்மை விட பலம் வாய்ந்ததாகும். எனினும் நம்மால் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.     இன்டர்கான்டினென்டல் கோப்பை, தாய்லாந்து கிங்ஸ் கோப்பை போட்டிகளில் பெற்ற அனுபவங்கள் உதவியாக உள்ளன.
கடந்த டிசம்பரில் 2 அணிகள் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. தகுதிச் சுற்று சவாலை ஏற்க தயாராக உள்ளோம்.  அடுத்து 10-ஆம் தேதி டோஹாவில் கத்தாருடன் ஆட உள்ளோம். ஆப்கன், வங்கதேச அணிகளையும் எளிதாக கருதக்கூடாது.
அதிக ஆட்டங்களில் ஆடுவதைக் காட்டிலும், சிறந்த பயிற்சி நேரமே வீரர்களுக்கு முக்கியம். இந்திய வீரர்கள், புதிய முறைப்படி தாக்குதல் ஆட்டத்தை கடைபிடிக்குமாறு கூறியுள்ளேன் என்றார் ஸ்டிமாக்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT