செய்திகள்

ஆஸி.-இங்கிலாந்து இடையே இன்று ஆஷஸ் 4-ஆவது டெஸ்ட் தொடக்கம்

4th Sep 2019 01:09 AM

ADVERTISEMENT


இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 4-ஆவது டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தால் 1 ரன் வித்தியாசத்தில் வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது.
ஆஸி. அணிக்கு எல்பிடபிள்யு தொடர்பாக முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாததால் தோல்வியடைந்தது. இதனால் தற்போது 5 ஆட்டங்கள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 4-ஆவது ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.
ஸ்மித் மீண்டும் வருகை:
மூன்றாவது ஆட்டத்தின் போது, ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் காயமடைந்து ஆட முடியாமல் போனது. தற்போது அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளது கூடுதல் பலமாகும். அவருக்கு பதிலாக களமிறங்கிய மார்னஸ் லேபுச்சேனும் அபாரமாக ஆடிய நிலையில், அவரும் இடம் பெறுவார். உஸ்மான் காஜா நீக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் சேர்க்கப்படலாம் எனக்கருதப்படுகிறது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணியில் ஓரே ஒரு மாற்றம் செய்யப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் கிரேய்க் ஓவர்டன் அழைக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்ஸன் மீதமுற்ற 2 ஆட்டங்களிலும் ஆட முடியாது.ஜேஸன் ராய்க்கு பதிலாக ஜோ டென்லி தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT