செய்திகள்

3-ஆவது டெஸ்ட்: முதல் இன்னங்ஸில் 497 ரன்களுக்கு இந்தியா டிக்ளேர்

20th Oct 2019 02:58 PM | Raghavendran

ADVERTISEMENT

 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10, புஜாரா 0 மற்றும் விராட் கோலி 12 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் ஷர்மா ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். மொத்தம் 255 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் விளாசி ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். இது சர்வதேச அரங்கில் அவரது முதல் இரட்டைச் சதமாகும். சதம் மற்றும் இரட்டைச் சதம் என இரண்டையும் சிக்ஸருடன் கடந்து வீரேந்திர சேவாக் ஆட்டத்தை நினைவுகூர்ந்த ரோஹித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT

அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 11-ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். ரவீந்திர ஜடேஜா 51 ரன்கள் சேர்த்தார். உமேஷ் யாதவ் 10 பந்துகளில் 5 இமாலய சிக்ஸர்களுடன் 31 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Tags : INDvsSA
ADVERTISEMENT
ADVERTISEMENT