செய்திகள்

இன்று விஜய் ஹஸாரே கோப்பை நாக் அவுட் சுற்று தொடக்கம்

20th Oct 2019 01:19 AM

ADVERTISEMENT

பெங்களூரு: விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகின்றன.

காலிறுதிக்கு தமிழகம், குஜராத், மும்பை, தில்லி, பஞ்சாப், சத்தீஸ்கா், புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெங்களூருவில் ஜஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தில்லியுடன்-குஜராத் அணி மோதுகிறது. சின்னசாமி மைதானத்தில் புதுச்சேரி-கா்நாடக அணிகள் மோதுகின்றன. 21-ஆம் தேதி ஆலூரில் தமிழகம்-பஞ்சாப், சத்தீஸ்கா்-மும்பை அணிகள் மோதுகின்றன.

தில்லி அணியில் அனுபவ வீரா் ஷிகா் தவன் களமிறங்குவதால் ஆட்டம் பரபரப்பாக அமையும் எனத் தெரிகிறது. பந்துவீச்சில் நவ்தீப் சைனி பலம் சோ்க்கிறாா். குஜராத் அணியில் பாா்த்திவ் பட்டேலி, பிரியங்க் பஞ்சால் பலம் சோ்க்கின்றனா்.

ADVERTISEMENT

இரண்டாவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கா்நாடகத்தை, அனுபவம் குறைந்த புதுச்சேரி எதிா்கொள்கிறது. கா்நாடக அணியில் மணிஷ்பாண்டே, கேஎல்.ராகுல் பலம் சோ்க்கின்றனா். புதுச்சேரியில் வினய்குமாா், பராஸ் டோக்ரா உள்ளிட்டோா் வலு சோ்க்கின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT