செய்திகள்

புதிய டி20 போட்டியில் விளையாடும் டெண்டுல்கர், லாரா!

16th Oct 2019 03:31 PM | எழில்

ADVERTISEMENT

 

2015-க்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்துக்குள் களமிறங்கவுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் மட்டுமல்ல, லாரா, சேவாக், முரளிதரன் என பிரபல முன்னாள் வீரர்கள் பலரும் ஒன்றிணைந்து டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் டி20 போட்டி, அடுத்த வருடம் பிப்ரவரி 2 முதல் 16 வரை மும்பையில் நடைபெறவுள்ளது. சச்சின், லாரா, முரளிதரன், காலிஸ், பிரெட் லீ, சந்தர்பால் என முன்னாள் வீரர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். ஓய்வு பெற்ற 110 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்கள். இந்தியா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், மே.இ. தீவுகள் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. மஹாராஷ்டிர அரசின் சாலைப் பாதுகாப்பு அமைப்பும் புரொபஷனல் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன. இந்தியா முழுக்க அடுத்தப் பத்து வருடங்களுக்கு இப்போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐயின் அனுமதியும் கிடைத்துள்ளது. 

ADVERTISEMENT

2013-ல் ஓய்வு பெற்ற சச்சின், 2014-ல் லார்ட்ஸிலும் 2015-ல் அமெரிக்காவிலும் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டங்களில் கலந்துகொண்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT