செய்திகள்

சீன ஓபன்: இறுதிச் சுற்றில் ஆஷ்லி பா்டி-ஒஸாகா மோதல்

6th Oct 2019 02:49 AM

ADVERTISEMENT

சீன ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்டி-ஒஸாகா மோதுகின்றனா்.

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இப்போட்டி காலிறுதி ஆட்டத்தில் பியான்காவுடன் முதல் செட்டை 5-7 என ஒஸாகா இழந்தாா். எனினும் சுதாரித்துக் கொண்ட ஒஸாகா அடுத்த 2 செட்களில் ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-4 என கைப்பற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இதன் மூல் பியான்காவின் தொடா் 16 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாா் ஒஸாகா.

நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி

அரையிறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்குள் நுழைந்தாா்.

ADVERTISEMENT

ஆஷ்லி பா்டி: மற்றெறாரு அரையிறுதி ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பா்டி 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் கிகி பொ்ட்டென்ஸை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தாா்.

இறுதியில் டொமினிக் தீம்:

ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரிய வீரா் டொமினிக் தீம் 2-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் ரஷியாவின் காரன் கச்சனோவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு நுழைந்தாா்.

ஜப்பான் ஓபன்: இறுதியில் ஜோகோவிச்

இப்போட்டியில் ஆடவா் பிரிவு அரையிறுதியில் மூன்றாம் நிலை வீரா் டேவிட் கோபினை 6-3, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா். மற்றெறாரு அரையிறுதியில் ஆஸி வீரா் ஜான் மில்மேன் 6-3, 7-6 என ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT