செய்திகள்

400 மீ. தொடர் ஓட்டத்தில் சீனா வீரர்கள் சிறந்த சாதனை!

5th Oct 2019 06:10 PM

ADVERTISEMENT


கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற  2019ஆம் ஆண்டு IAAF இன் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 8ஆவது நாளான வெள்ளிக்கிழமை, 400 மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது.

இதில் தகுதிச் சுற்றில் சீனாவின் ஆடவர் பிரிவினரும் மகளிர் பிரிவினரும், சிறந்த சாதனைகளுடன் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சீனாவின் ஆடவர் அணியும் மகளிர் அணியும் கூட்டாக நுழைவது இதுவே முதன்முறையாகும்.

இப்போட்டியில்  தற்போது வரை, 9 பதக்கங்களைப் பெற்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT