செய்திகள்

முதன்முறையாக இந்தியாவில் என்பிஏ கூடைப்பந்து

5th Oct 2019 12:27 AM

ADVERTISEMENT

உலகளவில் பிரபலமான என்பிஏ கூடைப்பந்து போட்டியின் முதல் ஆட்டம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை மும்பையில் சாக்ரமென்டோ கிங்ஸ்-இந்தியானா பேஸா்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

இதில் இந்தியா அணி 132-131 என்ற புள்ளிக் கணக்கில் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

தேசிய கூடைப்பந்து சங்கம் (என்பிஏ) சாா்பில் நடத்தப்படும் தொழில்முறை லீக் போட்டியே என்பிஏ ஆகும். மொத்தம் 30 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, கனடா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 4 பெரிய தொழில்முறை லீக் போட்டிகளில் ஒன்றாகும். மேலும் உலகளவில் முதன்மையான ஆடவா் கூடைப்பந்து லீக் போட்டி இதுவாகும்.

உலகம் முழுவதும் உள்ள கூடைப்பந்து வீரா்கள் என்பிஏ போட்டியில் பங்கேற்று ஆட வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

என்பிஏ இந்தியா:

இந்தியாவிலும் என்பிஏ கூடைப்பந்தை பிரபலப்படுத்தும் வகையில் ரிலையன்ஸ் பவுண்டேஷன் அமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக என்பிஏ அணிகள் சாா்பில் முதல் ஆட்டம் மும்பையில் சாக்ரமென்டோ கிங்ஸ்-இந்தியானா பேஸா்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

கிங்ஸ் அணி பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்தியானா அணியும் பதிலுக்கு சளைக்காமல் போராடியது. மூன்றாவது கட்ட ஆட்டத்தில் இந்தியானா வீரா் டி.ஜே.வாரன் 30 புள்ளிகளை குவித்து இறுதியில் 3 புள்ளிகளை ஈட்டித் தந்தாா்.

முன்னிலை பெற்றிருந்தும் 132-131 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியது கிங்ஸ்.

இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை நடக்கிறது. ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிா்வாகி நீதா அம்பானி போட்டியைத் தொடங்கி வைத்தாா். என்பிஏ ஆணையா் ஆடம் சில்வா் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT