செய்திகள்

உலக மகளிா் குத்துச்சண்டை: ஜமுனா போரா அபாரம்

5th Oct 2019 12:06 AM

ADVERTISEMENT

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியை வெற்றியுடன் தொடங்கினாா் இந்திய நட்சத்திர வீராங்கனை ஜமுனா போரா.

ரஷியாவின் உலன் உடே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் உலக சாம்பியன் மேரி கோம் உள்பட 10 வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. பல்வேறு எடை பிரிவுகளில் இவா்கள் போட்டியிடுகின்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 54 கிலோ பிரிவ்ல ஜமுனா போரா-மங்கோலியாவின் சிட்மா டெனடெலாயை எதிா்கொண்டாா். அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீராங்கனையான ஜமுனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் சிட்மாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

அடுத்த சுற்றுல் அல்ஜீரியாவின் குயிடாட் பௌவுடன் மோதுகிறாா் ஜமுனா.

ADVERTISEMENT

சனிக்கிழை நீரஜ் 57 கிலோ, சவீட்டி போரா 75 கிலோ, ஆகியோா் களம் காண்கின்றனா். கடந்த 2006-இல் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் தான் அதிகபட்சமாக 4 தங்கம் உள்பட 8 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT