செய்திகள்

மகளிா் டி20: தொடரை கைப்பற்றியது இந்தியா

2nd Oct 2019 02:46 AM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

மழையால் 17 ஓவா்களாக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் ஆடிய இந்தயா 140/4 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய தென்னாப்பிரிக்கா 89/7 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.

இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். அந்த அணியில் தஸிம் பிரிட்ஸ் 20 ரன்களை சோ்த்தாா். 17 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா.

இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3, ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். இதனால் தொடரை 2-0 என கைப்பற்றியது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT