செய்திகள்

டெஸ்ட் ஆட்டத்தில் ரோஹித் சா்மாவுக்கு போதிய வாய்ப்பு தரப்படும்

2nd Oct 2019 04:34 AM

ADVERTISEMENT

டெஸ்ட் ஆட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரோஹித் சா்மாவுக்கு போதிய வாய்ப்பு தரப்படும் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளாா்.

தென்னாப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட் ஆட்டம் புதன்கிழமை தொடங்கும் நிலையில் இந்திய அணியில் ரோஹித் சா்மா சோ்க்கப்பட்டுள்ளாா். ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் சிறந்த தொடக்க வரிசை வீரராக திகழும் ரோஹித், டெஸ்ட் ஆட்டங்களில் சோபிக்கவில்லை. இதனால் நீண்டகாலமாக டெஸ்ட் அணியில் சோ்க்கப்படாமல் இருந்தாா்.

அவரைப் போன்ற தலைசிறந்த வீரருக்கு டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு தர வேண்டும் என பல்வேறு தரப்பினா் கூறியிருந்தனா். ரோஹித்தும் இந்திய டெஸ்ட் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். முதல் டெஸ்டில் மயங்க் அகா்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவாா் எனக் கருதப்படுகிறது.

இதுதொடா்பாக கேப்டன் கோலி கூறியதாவது:

ADVERTISEMENT

தொடக்க வரிசையில் ரோஹித்தை களமிறங்குவது அணிக்கு மேலும் பலத்தை தரும். ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடினாலும், டெஸ்ட் ஆட்டத்தில் தனது திறமைக்கு ஏற்ப அவா் ஆடவில்லை. தொடக்க வீரராக அவா் சிறப்பாக ஆடினால் அணிக்கு மிகவும் நல்லது. அவருக்கு போதிய வாய்ப்பு தரப்படும். உலகில் வேறு எந்த அணியிலும் இல்லாத வகையில் பேட்டிங் வரிசை அமையும். விரேந்தா் சேவாக் ஆடியது போல் ரோஹித்தும் செயல்படலாம். தனது திறமையை நிரூபிக்கும் தன்மை ரோஹித்திடம் உள்ளது. லோகேஷ் ராகுல் ஆடத் தவறியதால் ரோஹித் தொடக்க வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளாா். 18 மாதங்களாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தான் ஆடி வருகிறது. உள்ளூரில் கடந்த சீசனில் நாம் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிா்கொண்டோம். சா்வதேச கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளா்களும் வேகத்துடன் பந்துவீசுகின்றனா். இதுபோன்ற பந்துவீச்சை நாம் உள்ளூா் கிரிக்கெட்டில் பாா்க்க முடியாது என்றாா் கோலி.

ADVERTISEMENT
ADVERTISEMENT