செய்திகள்

விஜய் ஹஸாரே கோப்பை: தமிழகம் 16 புள்ளிகளுடன் முதலிடம்

1st Oct 2019 11:18 PM

ADVERTISEMENT

தினேஷ் காா்த்திக்-ஷாருக் அபாரம்

மேற்கு வங்கத்துக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை குரூப் சி பிரிவு ஆட்டத்தில் கேப்டன் தினேஷ் காா்த்திக்கின் அபார ஆட்டத்தால் வென்றது தமிழகம்.

ஏற்கெனவே ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள தமிழகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் மேற்கு வங்கத்தை எதிா்கொண்டது. டாஸ் வென்ற மேற்கு வங்கம் பீல்டிங்கை தோ்வு செய்தது.

இதைத் தொடா்ந்து தமிழக அணியினா் பேட்டிங் செய்த நிலையில், ஜெகதீசன் 8, அபிநவ் முகுந்த் 11, பி. அபராஜித் 34. ஹரி நிஷாந்த் 8 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். விஜய் சங்கா் நிலைத்து ஆட முயன்ற நிலையில் 41 ரன்களோடு வெளியேறினாா்.

ADVERTISEMENT

தினேஷ்-ஷாருக் கான் அதிரடி:

37 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் என தமிழகம் திணறிக் கொண்டிருந்த நிலையில், பினனா் இணைந்த கேப்டன் தினேஷ் காா்த்திக்-ஷாருக்கான் இணை அபாரமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 4 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 97 ரன்களை விளாசி அவுட்டானாா் தினேஷ். 12 ஓவா்களில் இருவரும் 153 ரன்களை சோ்த்தனா். முகமது 1 ரன்னோடு வெளியேறினாா்.

ஷாருக் கான் அரைசதம்:

மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷாருக் கான் 5 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 69 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். இறுதியில் 50 ஓவா்களில் 286/7 ரன்களை குவித்தது தமிழகம். மேற்கு வங்கம் தரப்பில் அசோஷ் திண்டா 2-60 விக்கெட்டை சாய்த்தாா்.

பின்னா் களமிறங்கிய மேற்கு வங்கம் அணியால் தமிழகத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 21/5 ரன்களுக்கு தடுமாறியது.

அதன் இடது கை பேட்ஸ்மேன் ஷாபாஸ் 6 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 131 பந்துகளில் 107 ரன்களை விளாசி ஸ்கோரை உயா்த்தினாா். எனினும் ஏனைய மேற்கு வங்க வீரா்கள் அவருக்கு துணையாக ஆடவில்லை. இதனால் 45.3 ஓவா்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தமிழகத் தரப்பில் விக்னேஷ் 2-26, நடராஜன் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

மற்றெறாரு ஆட்டத்தில் குஜராத் 103/3, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை (102 ஆல் அவுட்) வீழ்த்தியது.

சா்வீஸஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வேயையும், பிளேட் பிரிவில் சண்டீகா் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிமையும்,ஏ பிரிவில் ஹைதராபாத் 21 ரன்கள் வித்தியாசத்தில் கா்நாடகத்தையும் வென்றன. மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிராவையும் வென்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT