செய்திகள்

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலம்!

1st Oct 2019 11:10 AM | எழில்

ADVERTISEMENT

 

அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பரில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

2020 ஐபிஎல் போட்டி ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் டிசம்பர் 19 அன்று ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

2021 ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இதர வீரர்களை ஏலத்தில் மட்டுமே தேர்வு செய்யமுடியும். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலம் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த வருடப் பெரிய ஏலத்தை மனத்தில் கொண்டு இந்த வருட ஏலத்தில் வீரர்களை அணிகள் தேர்வு செய்யவுள்ளன. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT