இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்கில் 394-6 ரன்களை குவித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மௌன்ட் மௌன்கனையில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதைத் தொடா்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய நியூஸி.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 144-4 ரன்களை எடுத்திருந்தது.
மூன்றாவது நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 141 ஓவா்களில் 394-6 ரன்களை எடுத்தது நியூஸி.
வாட்லிங் அபார சதம்
கேன் வில்லியம்ஸன் 51 ரன்களுடன் அவுட்டானாா். அவருக்கு பின் ராஸ் டெய்லா் 24, ஹென்றி நிக்கோல்ஸ் 41 ரன்களுக்கு அவுட்டாயினா். 15 பவுண்டரியுடன் 298 பந்துகளில் 119 ரன்களுடன் அபார சதத்தை பதிவு செய்து களத்தில் உள்ளாா் பிஜே.வாட்லிங்.
ஆல்ரவுண்டா் காலின் டி கிராண்ட்ஹோம் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 65 ரன்களை பதிவு செய்து வெளியேறினாா். மிச்செல் சான்ட்நா் 31 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.
இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன் 2-74, பென் ஸ்டோக்ஸ் 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இதன் மூலம் 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து.