செய்திகள்

கேப்டனாக குறைந்த இன்னிங்ஸில் 5000 டெஸ்ட் ரன்கள்: கோலியின் புதிய மைல்கல்!

22nd Nov 2019 07:58 PM

ADVERTISEMENT


வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் விராட் கோலி, கேப்டனாக குறைந்த இன்னிங்ஸில் 5000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.

இந்த இன்னிங்ஸில் இந்தியக் கேப்டன் விராட் கோலி 32-வது ரன்னை எடுத்தபோது கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம், இந்த மைல்கல்லை குறைந்த இன்னிங்ஸில் எட்டிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

  வீரர் இன்னிங்ஸ்
1. விராட் கோலி 86
2. ரிக்கி பாண்டிங் 97
3. கிளைவ் லாய்ட் 106
4. கிரீம் ஸ்மித் 110
5. ஆலன் பார்டர் 116
6. ஸ்டீபன் பிளெமிங் 130


அதேசமயம், கேப்டனாக 5000 டெஸ்ட் ரன்களைக் கடக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

கேப்டனாக குறைந்த இன்னிங்ஸில் (65 இன்னிங்ஸ்) 4000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலியே தன்வசப்படுத்தியுள்ளார்.
 

Tags : Virat Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT