செய்திகள்

பகலிரவு டெஸ்ட்: கௌரவிக்கப்பட்ட முன்னாள் கேப்டன்கள்!

22nd Nov 2019 11:04 PM

ADVERTISEMENT


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் முதல்நாள் ஆட்டநேர முடிவுக்குப் பிறகு சச்சின், டிராவிட் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடுவதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

அதன் ஒரு பகுதியாக, முதல் நாள் ஆட்டநேர முடிவுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், கபில் தேவ், ராகுல் டிராவிட், சாந்து போர்டே, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதுதான் பகலிரவு டெஸ்ட்டுக்கான திட்டம்: கபில் தேவ், அசாருதின், சச்சின், டிராவிட் என பல ஜாம்பவான்கள் வருகை!

ADVERTISEMENT

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண திரண்ட ரசிகர்கள் குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில், 

"இதுபோன்ற எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்தால் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது. இதைப் பார்ப்பதற்கே சிறப்பாக உள்ளது" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT