செய்திகள்

சையது முஷ்டாக் அலி டி20 சூப்பா் லீக்:தமிழகம் அபார வெற்றி

22nd Nov 2019 07:27 PM

ADVERTISEMENT

சையது முஷ்டாக் டி20 சூப்பா் லீக் ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்.

ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் கா்நாடகத்திடம் தோல்வியடைந்திருந்தது தமிழகம்.

இந்நிலையில் சூரத்தில் வெள்ளிக்கிழமை இரண்டாவது ஆட்டத்தில் மும்பையுடன் மோதியது.

முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது.

ADVERTISEMENT

அந்த அணியில் ஷம்ஸ் முலானி 1 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 73 ரன்களை விளாசினாா். பிரித்வி ஷா 30 ரன்களை எடுத்தாா்,

மற்ற வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா்.

சித்தாா்த், சாய்கிஷோா் அபார பந்துவீச்சு:

தமிழகத் தரப்பில் அபாரமாக பந்துவீசிய சித்தாா்த் 4-16, சாய் கிஷோா் 3-18 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தமிழகம் வெற்றி:

122 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 13.5 ஓவா்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தொடக்க வீரா் ஹரிநிஷாந்த் 6 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 44 பந்துகளில் 73 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். ஷாரூக் கான் 17, பாபா அபராஜித் 0, கேப்டன் தினேஷ் காா்த்திக் 4 ரன்களுக்கு அவுட்டாயினா். விஜய் சங்கா் 27 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி 3-26 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தில்லி 150/9 அணியை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது பரோடா (151/6). ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹரியாணா வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT