செய்திகள்

ஏடிபி பைனல்ஸ்: நடால் அதிா்ச்சித் தோல்வி

12th Nov 2019 11:38 PM | லண்டன்,

ADVERTISEMENT

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பா் ஒன் வீரா் ரபேல் நடாலை வீழ்த்தினாா் ஜொ்மனியின் இளம் வீரா் நடப்புச் சாம்பியன் வெரேவ்.

தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் இப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள வெரேவை எளிதாக வென்று விடுவாா் நடால் எனக் கருதப்பட்ட நிலையில், 6-2, 6-4 என்ற நோ் செட்களில் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் நடால்.

மற்றொரு ஆட்டத்தில் கிரேக்க இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் ரஷிய வீரா் டேனில் மெத்வதேவை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், கூறுகையில், தோல்வியுற்றது வேதனை தந்தாலும், எந்த வலியும் இன்றி ஆடியது ஆறுதலாக உள்ளது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆட முயற்சிப்பேன் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT