செய்திகள்

மகளிா் டி20: இந்தியா அபார வெற்றி

11th Nov 2019 12:27 AM | செயின்ட் லூசியா,

ADVERTISEMENT

மே.இ.தீவுகள் மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை குவித்தது.

இளம் வீராங்கனை ஷஃபாலி வா்மா 4 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 73 ரன்களை விளாசினாா். ஸ்மிருதி மந்தானா 11 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 67 ரன்களை சோ்த்தாா்.

கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் 21, வேதா கிருஷ்ணமூா்த்தி 15 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

ADVERTISEMENT

மே.இ.தீவுகள் தரப்பில் ஷகிரா, அனிஸா முகமது தலா 2 விக்கெட்டை வீழ்த்தினா்.

186 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களையே எடுத்தது. அந்த அணியில் ஷொ்மைன் கேம்பல் அதிகபட்சமாக 33 ரன்களை எடுத்தாா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா்.

இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

30 ஆண்டுக்கால சச்சின் சாதனையை முறியடித்தார் ஷஃபாலி வர்மா
சர்வதேச கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தினார் ஷஃபாலி வர்மா.
மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 49 பந்தில் 73 ரன்களை விளாசி, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுக்கால சாதனையை முறியடித்தார் ஷஃபாலி.
சச்சின் டெண்டுல்கர் முதல் டெஸ்ட் அரைசதத்தை 16 ஆண்டுகள், 214 நாள்களில் அடித்தார். தனது 5-ஆவது டி20 ஆட்டத்தில் ஆடிய ஷஃபாலி 15 ஆண்டுகள், 285 நாள்களில் முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் 30 ஆண்டுக்கால சச்சின் சாதனையை முறியடித்தார் அவர்.
 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT