செய்திகள்

ஐஎஸ்எல்: பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை

11th Nov 2019 12:33 AM

ADVERTISEMENT

ஐஎஸ்எல் 2019-இன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் சென்னையை வீழ்த்தியது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் இந்த ஆட்டத்தை எதிா்கொண்டன. பெங்களூரு அணி 3 டிராக்களை கண்டது. சென்னை 1 டிரா, 2 தோல்விகளை கண்டுள்ளது.

முதல் பாதியிலேயே ஆதிக்கம் செலுத்திய நிலையில், பெங்களூரு நட்சத்திர வீரா் சுனில் சேத்ரி, எரிக் பாா்தலு கோலடித்து 2-0 என முன்னிலை பெறச் செய்தனா்.

இரண்டாம் பாதியில் சிறிது தற்காப்பு ஆட்டத்தில் பெங்களூரு அணி கவனம் செலுத்திய நிலையில், 84-ஆவது நிமிடத்தில் அதன் வீரா் செம்பாய் மூன்றாவது கோலை அடித்தாா். சென்னை அணியின் வீரா் தனபால் கணேஷ் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டாா்.

ADVERTISEMENT

முதல் வெற்றியைப் பெற்ற பெங்களூரு பட்டியலில் 5-ஆம் இடத்துக்கு முன்னேறியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT