செய்திகள்

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் & கிஷோரின் அபார பந்துவீச்சினால் டி20 ஆட்டத்தில் வென்ற தமிழக அணி!

9th Nov 2019 02:27 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ள தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தில் இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தும்பாவில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய முரளி விஜய்யும் ஜெகதீசனும் நன்கு விளையாடினார்கள். விஜய் 35 ரன்களும் ஜெகதீசன் 34 ரன்களும் எடுத்தார்கள். 3-வது வீரராகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். தமிழக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆரம்பம் முதலே தமிழகப் பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்குக் கடுமையான நெருக்கடியை உண்டு பண்ணினார்கள். மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர். கேப்டன் மஹிபால் லோம்ரோர் (19 வயது) மட்டும் பொறுப்புடன் விளையாடி 32 ரன்கள் எடுத்தார். இதர பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் திரும்பியதால் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழக அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தமிழக அணித் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT