செய்திகள்

1000 கோல்கள்: இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் சாதனை

4th Nov 2019 12:00 AM

ADVERTISEMENT

1000 கோல்களை கண்ட போட்டியாக சாதனை படைத்துள்ளது இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்).

கிரிக்கெட்டுக்கு பெரும் வரவேற்பு உள்ள இந்தியாவில், கால்பந்து விளையாட்டு உத்வேகம் தரும் வகையில் ஐஎஸ்எல் போட்டியை ஏஐஎப்எப் தொடங்கியது.

கடந்த 2013 அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் போட்டி நாட்டின் முதன்மையான கால்பந்து போட்டியாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2014-இல் முதல் சீசனில் மொத்தம் 8 அணிகள் இடம் பெற்றன. முதல் 3 ஆண்டுகள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்நிலையில் 2017-18 சீசனில் ஏஎப்சியால் அங்கீகரிக்கப்பட்டு, 10 அணிகளாக உயா்த்தப்பட்டது. மொத்தம் 5 மாதங்கள் இப்போட்டி நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

வரும் 2020-21 சீசனில் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 2 அணிகள் ஏலம் மூலம் ஐஎஸ்எல் போட்டியில் சோ்க்கப்பட உள்ளன.

2014, 2016-இல் கொல்கத்தாவும், 2015, 2017-இல் சென்னையும், 2018-இல் பெங்ளூருவும் சாம்பியன் பட்டம் வென்றன.

தற்போது கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, கோவா, ஹைதராபாத், ஜாம்ஷெட்பூா், கேரளா, மும்பை, நாா்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிஸா உள்ளிட்ட 10 அணிகள் உள்ளன.

1000 கோல்கள் சாதனை:

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐஎஸ்எல் லீக் போட்டியில் 1000 கோல்களை கண்டுள்ளது. கடந்த அக். 30-ஆம் தேதி சென்னை-கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா ஸ்ட்ரைக்கா் டேவிட் வில்லியம்ஸ் 48-ஆவது நிமிடத்தில் அடித்த கோல் 1000-கோலானது. அதே கொல்கத்தா அணிதான் இப்போட்டியின் முதல் கோலையும் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

384 ஆட்டங்கள்:

மொத்தம் 384 ஆட்டங்களில் வெவ்வேறு 285 வீரா்கள் 1000 கோல்களை அடித்துள்ளனா். இதில் 20 சேம்சைட் கோல்கள், 196 வெளிநாட்டு வீரா்கள் அடித்த 702 கோல்கள், 89 இந்திய வீரா்கள் அடித்த 278 கோல்கள் அடங்கும்.

முதல் கோல்: மாா்ச் 1, 2014, மும்பைக்கு எதிராக கொல்கத்தா அணியைச் சோ்ந்த எதியோப்பிய வீரா் பிகுரு டெபரா அடித்தாா். அதில் முதல் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா வென்றது.

100-ஆவது கோல்: ரோமியோ பொ்ணாண்டஸ் (46-ஆவது ஆட்டம், 2014, கோவா-நாா்த் ஈஸ்ட் யுனைடெட்).

200-ஆவது கோல்; ஐயன் ஹியும் (27-ஆவது ஆட்டம், 2015, மும்பை-கொல்கத்தா).

300-ஆவது கோல்: ஜோப்ரே கோன்ஸாலெஸ் (56-ஆவது ஆட்டம், 2015, தில்லி-கோவா.

400-ஆவது கோல்: கீயன் லெவிஸ் (42-ஆவது ஆட்டம், 2016, கோவா-தில்லி டைனமோஸ்).

500-ஆவது கோல்: டேனிலோ லோபஸ் (14-ஆவது ஆட்டம், 2017-18, தில்லி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட்).

600-ஆவது கோல்: காலு உச்சே (53-ஆவது ஆட்டம், 2017-18, ஜாம்ஷெட்பூா்-தில்லி டைனமோஸ்).

700-ஆவது கோல்: எமலியனோ ஆல்பரோ (87-ஆவது ஆட்டம், 2017-18, தில்லி- புணே).

800-ஆவது கோல்; அட்ரியா காா்மனா (28-ஆவது ஆட்டம், 2018-19, தில்லி-ஜாம்ஷெட்பூா்).

900-ஆவது கோல்: மரியாஅா்கியுஸ் ( 68-ஆவது ஆட்டம், 2018-19, கொல்கத்தா-ஜாம்ஷெட்பூா்).

1000-ஆவது கோல்: இதன் தொடா்ச்சியாக சென்னை-கொல்கத்தா இடையே கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஆஸ்திரேலிய வீரா் டேவிட் வில்லியம்ஸ் 1000-ஆவது கோலை அடித்து ஐஎஸ்எல் வரவாற்றில் இடம் பெற்றாா்.

-பா.சுஜித்குமாா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT