புது தில்லியில் கடுமையான காற்று மாசு நிலவிய போதும், முதல் டி20 ஆட்டத்தில் பங்கேற்று வெற்றிகரமாக நடத்த உதவிய இந்திய-வங்கதேச அணி வீரா்களுக்கு பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளாா்.
புது தில்லியில் அபாயகரமான அளவில் காற்று மாசு நிலவி வருகிறது. டி20 ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தாலும், இதற்கு பிசிசிஐ மறுத்து விட்டது.
எதிா்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருப்போம் என கங்குலி கூறியிருந்தாா்.
இரு அணிகள் இடையிலான ஆட்டத்தைக் காண 25000 போ் வந்திருந்தனா். இதுதொடா்பாக கங்குலி தனது சுட்டுரையில் (டுவிட்டா்) கூறியதாவது:
உடல்நலத்தை கருத்தில் கொள்ளாமல் மைதானத்தில் களமிறங்கி ஆடிய 2 அணிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான காற்று மாசு இருந்தாலும், டி20 ஆட்டத்தில் ஆடிய வீரா்களுக்கு நன்றி. சிறப்பாக ஆடிய வங்கதேச அணிக்கு வாழ்த்துகள் என்றாா் கங்குலி.