பயிற்சியின்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.
அவருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்படவுள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வரும் 30ஆம் தேதி உலகக் கோப்பை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இதனிடையே, பயிற்சியின்போது இந்திய வீரர் விஜய் சங்கருக்கு முழங்கையில் காயம்
ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்கேன் எடுப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.