வியாழக்கிழமை 27 ஜூன் 2019

1992 உலகக் கோப்பை இங்கிலாந்து-பாகிஸ்தான் இறுதி ஆட்டம்

DIN | Published: 25th May 2019 12:59 AM

1992 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானும்-இங்கிலாந்தும் மோதின. டாஸ் வென்ற இம்ரான் கான் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் பாக். அணி 249-6 ரன்களை சேர்த்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்தால் பாகிஸ்தானின் வாஸிம் அக்ரம், அகிப் ஜாவித், சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமதுவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. 69-4 ரன்களுக்கு தடுமாறிய நிலையில் ஆலன் லாம்ப்-நீல் பேர்பிரதர் 72 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் வாஸிம் அக்ரமை பந்துவீச அனுப்பினார் இம்ரான். 35-ஆவது ஓவரில் அக்ரம் சிறப்பாக பந்துவீசி ஆலன் லாம்ப், கிறிûஸ வெளியேற்றினார். 

அதில் இருந்து மீளாத இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது. முதன்முதலாக பட்டம் வென்றது பாகிஸ்தான்.

2019 ஐசிசி உலகக் கோப்பை மைதானங்கள்...

தி ஓவல் - லண்டன் 

மொத்த ஆட்டங்கள் 5

மொத்த பார்வையாளர் எண்ணிக்கை 25,000

கடந்த 1845-இல் கட்டப்பட்டது. தேம்ஸ் நதிக்கரையில் கட்டப்பட்ட ஓவல் மைதானம், சர்ரே கவுண்டி அணியின் மைதானமாகும். 
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே வரலாற்றிலேயே 1880-இல் முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்ற மைதானம் இதுவாகும். 
இங்கு 100 டெஸ்ட் ஆட்டங்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது. 1975, 1979, 1983, 1999 உலகக் கோப்பை போட்டிகளின்போது, முக்கிய ஆட்டங்கள் நடைபெற்றன. கடந்த 1999-இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ஆட்டங்கள்: 

மே. 30-இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா, ஜூன் 2-தென்னாப்பிரிக்கா-வங்கதேசம், ஜூன் 5-வங்கதேசம்-நியூஸிலாந்து, ஜூன் 9-இந்தியா-ஆஸ்திரேலியா, ஜூன் 15-இலங்கை-ஆஸ்திரேலியா. 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி!
உலகக் கோப்பை: மே.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங்!
உலகக் கோப்பை முடிந்த பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ள ‘83’ கிளைமாக்ஸ்!
நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியை மேலும் சுவாரசியமாக்கியுள்ள பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!
நியூஸி. வெற்றி நடைக்கு பாக். தடை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது