வியாழக்கிழமை 27 ஜூன் 2019

கோவையில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி

DIN | Published: 25th May 2019 12:50 AM
கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியின் அட்டவணையை வெளியிடுகிறார்கள் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் துணைத் தலைவர்கள் (இடமிருந்து) சி.ஆனந்த், டி.பழனிசாமி, செயலாளர் சுரேஷ் (பொறுப்பு) மேல

கோவையில் ஆடவர் மற்றும் மகளிருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் மே 27 ஆம் தேதி தொடங்குகின்றன.
இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக துணைத் தலைவர் டி.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் ஆடவர்களுக்கான 54ஆவது நாச்சிமுத்து கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் மகளிருக்கான 18 ஆவது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி ஆகியவை கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் மே 27 ஆம் தேதி முதல் ஜூ ன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இதில் ஆடவர் "ஏ' பிரிவில் சென்னை வருமானவரி, இந்தியன் ரயில்வே, இந்திய ராணுவப் படை, கர்நாடக பாங்க் ஆஃப் பரோடா அணிகளும், "பி' பிரிவில் லோனாவாலா இந்திய கப்பல், சென்னை இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, கோவை மாவட்ட கூடைப் பந்துக் கழகம் என 8 அணிகளும் பங்கேற்கின்றன. மகளிர் "ஏ' பிரிவில் தென்மேற்கு ரயில்வே, செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே, கேரள போலீஸ், அரைஸ் ஸ்டீல்ஸ் அணிகளும்,  "பி' பிரிவில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே, கேரள மாநில மின்சார வாரியம், தென்னக ரயில்வே, கோவை மாவட்டக் கூடைப்பந்துக் கழகம் என 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஆடவர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் என்.மகாலிங்கம் சுழற்கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகை, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
மகளிர் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
வரும் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் மோதும். இந்தப் போட்டிகள் கோவை வஉசி பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் தினமும் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றார்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த இந்திய அணி!
உலகக் கோப்பை: மே.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங்!
உலகக் கோப்பை முடிந்த பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ள ‘83’ கிளைமாக்ஸ்!
நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பைப் போட்டியை மேலும் சுவாரசியமாக்கியுள்ள பாகிஸ்தான்: ஹைலைட்ஸ் விடியோ!
நியூஸி. வெற்றி நடைக்கு பாக். தடை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது