திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

காலவரையற்ற விடுமுறையில் செல்ல விரும்புகிறேன்

DIN | Published: 25th May 2019 12:57 AM

காலவரையற்ற விடுமுறையில் செல்ல விரும்புவதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்கௌர் தெரிவித்தார்.
மே.இ.தீவுகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில், ஹர்மன்ப்ரீத் கௌரும், அணி நிர்வாகமும் இணைந்து மூத்த வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காமல் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில், பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும் பங்கு இருப்பதாக புகார் எழுந்தது. 
மிதாலி ராஜ் அவருக்கு எதிராக சரமாரியாக புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, பவாரின் பதவிக் காலத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மிதாலி ராஜ் கேப்டனாகவும், டி20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கௌர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். 
அதன்பிறகு, மிதாலி ராஜுக்கும், தனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கௌர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அவர் காலவரையற்ற விடுமுறையில் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் விளையாட்டு செய்தி இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன். 
இதனால், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சகாலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்
மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20
உலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்
ஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து