திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

இந்தியா-நியூஸிலாந்து இடையே இன்று பயிற்சி ஆட்டம்

DIN | Published: 25th May 2019 12:56 AM

உலகக் கோப்பையையொட்டி, இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இந்த முறை உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர முனைப்பில் உள்ளது. ரோஹித் சர்மா, தவண்,  தோனி, தினேஷ் கார்த்திக் என அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களும், விஜய் சங்கர், பும்ரா, ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் என இளம்புயல்களும் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.
நியூஸிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்குகிறது. மார்டின் கப்தில், காலின் மன்றோ, ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர், டிம் சவுதீ, டாம் லாதம் என அனுபவம் மிக்க வீரர்கள் அந்த அணியில் அணிவகுத்து நிற்கின்றனர். விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் இந்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. பயிற்சி ஆட்டத்திலும் சுவாரசியத்துக்கு குறைவு இருக்காது என ரசிகர்கள் நம்பலாம்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் பயிற்சி ஆட்டம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கவாஸ்கர் சாதனையைச் சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!
புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்
மழையால் கைவிடப்பட்டது இந்தியா-தென்னாப்பிரிக்க முதல் டி20
உலக ஆடவர் குத்துச்சண்டை: போராடி வென்றார் கவிந்தர் சிங்
ஆஷஸ்: தொடரை சமன் செய்தது இங்கிலாந்து