வியாழக்கிழமை 27 ஜூன் 2019

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: அரை இறுதிக்கு ஏர்போர்ஸ் அணி தகுதி

DIN | Published: 25th May 2019 12:51 AM

கரூரில் நடைபெற்றுவரும் அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஆர்மி, இந்தியன் ஏர்போர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை தகுதி பெற்றன.
கரூரில் எல்ஆர்ஜி நாயுடு நினைவு 61-வது அகில இந்திய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி கடந்த 21-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.
ஏ குரூப், பி குரூப் என இரு பிரிவுகளாக லீக் முறையில் நடைபெறும் இப்போட்டியில் ஏ பிரிவில் சென்னை ஐசிஎஃப், புதுதில்லி ஏர்போர்ஸ், மும்பை மத்திய ரயில்வே, பெங்களூர் பேங்க் ஆஃப் பரோடா அணிகளும், பி பிரிவில் இந்தியன் நேவி, சென்னை  இந்தியன் வங்கி, ஹைதராபாத் இன்கம்டாக்ஸ், புதுதில்லி இந்தியன் ஆர்மி அணிகளும் இடம்பெற்றுள்ளன.  மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
சனிக்கிழமை மாலையில் அரை இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நியூஸி. வெற்றி நடைக்கு பாக். தடை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
விம்பிள்டன்: ராம்குமார் வெளியேற்றம்
ஓய்வை ஒத்திவைத்தார் கெயில்
இந்தியாவுக்குத் தடை போடுமா மே.இ. தீவுகள்? இன்று மோதல்
காலிறுதியில் நெதர்லாந்து, இத்தாலி: மகளிர் உலக கோப்பை கால்பந்து