உலகக் கோப்பையை கோலியால் மட்டுமே வென்று தர முடியாது: வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருவரால் மட்டுமே உலகக் கோப்பையை வென்று தந்துவிட முடியாது; சக வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்
உலகக் கோப்பையை கோலியால் மட்டுமே வென்று தர முடியாது: வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருவரால் மட்டுமே உலகக் கோப்பையை வென்று தந்துவிட முடியாது; சக வீரர்களின் ஒத்துழைப்பும் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.    
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
தனி ஒரு வீரரால் மட்டுமே உலகக் கோப்பையை வென்று தந்துவிட முடியாது. ஒட்டுமொத்த அணியினரும் உழைப்பைத் தர வேண்டும். அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் ஒன்றும் செய்துவிட முடியாது.
நமது அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நம்மால் அதிக ரன்களை குவிக்க முடியும். பேட்டிங் வரிசையில் 4, 6, 8 ஆகிய இடங்கள் பிரச்னையாக எனக்கு படவில்லை.  சூழ்நிலையைப் பொறுத்து வீரரை மாற்றி இந்த இடங்களில் களமிறக்கலாம்.
ஒரு அணிக்கு மட்டும் இரண்டு புதிய பந்துகளை அளிப்பது, பிட்ச் சமதளமாக இருப்பது போன்றவை பந்துவீச்சாளர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தும். ஒரு அணி 350க்கும் மேல் ரன்களை குவிக்கும். எதிரணி 45 ஓவர்களுக்கும் சுருண்டு விடும். ஒரு நாள் ஆட்டங்களில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதே இல்லை.
நாங்கள் விளையாடும்போதெல்லாம்  28 மற்றும் 30ஆவது ஓவரில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். சில அணிகள் முன்பே ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தி வந்தது. பேட்ஸ்மேன்களுக்கு இந்த வகை பந்துவீச்சுகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பந்து கடினமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து விளையாடுகின்றனர்.
பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் விதிகளில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் என இரண்டு சுழல் மன்னர்கள் இந்திய அணியில் உள்ளனர். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்கள் இருவரும் குறித்து நன்கு அறிந்து கொண்டனர். நமது சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு உலகக் கோப்பைப் போட்டியில் பாராட்டும் வகையில் இருக்கும். ஹார்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கேஎல் ராகுல் உள்ளிட்ட சிறந்த வீரர்களுடன் இந்திய அணி வலுவாகத் திகழ்கிறது என்றார் சச்சின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com