ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து (30) ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார்.

தோஹாவில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டத்தில் 2.70 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலாவதாக வந்தார்.போட்டியின்போது, அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அனபாலிக் ஸ்டெராய்ட் ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஏ மாதிரி பிரிவு சோதனையாகும். பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும்.
தற்போது, அவருக்கு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு இயக்குநர் நவீன் அகர்வால் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே, தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை திட்டவட்டமாக கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com