உலகக் கோப்பை கடும் சவாலாக இருக்கும்: விராட் கோலி

உலகக் கோப்பை தொடர் கடும் சவாலாக இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
உலகக் கோப்பை கடும் சவாலாக இருக்கும்: விராட் கோலி


உலகக் கோப்பை தொடர் கடும் சவாலாக இருக்கும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி, செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மும்பையில் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

2019 உலகக் கோப்பை தொடர் கடும் சவாலாக இருக்கும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டியுள்ளது. அதை நாங்கள் சரியாக செய்தால் நிச்சயம் முடிவில் வெற்றி கிடைக்கும். ஆட்டத்தின்போது கவனத்தை சிதறவிடக் கூடாது. 
2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பார்த்தால், ஆப்கன் அணி சிறப்பாக உள்ளது. மிகப் பெரிய மாற்றத்தை அந்த அணி அடைந்துள்ளது. எந்த அணியாலும் எந்த அணியையும் சோகத்தில் ஆழ்த்தி விட முடியும். இதைதான் நாங்கள் மனதில் வைத்திருக்கிறோம். குரூப் ஆட்டம் போன்று தற்போது இல்லை. ரவுண்ட் ராபின் முறையில் விளையாடவுள்ளோம். அனைத்து அணிகளும் எதிரணியுடன் தலா ஒரு முறை மோதியாக வேண்டும். முதல் இரண்டு ஆட்டங்களில் அதிக அழுத்தம் எங்களுக்கு இருக்கும். ஆடுகளங்கள் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால், இப்போது அங்கு கோடைக்காலம்தான். அதிக ரன்களை குவிக்க முடியும். ஆனால், உலகக் கோப்பை தொடர் என்பது வித்தியாசமானது. 
அதை இரு நாடுகளுக்கு இடையேயான தொடருடன் ஒப்பிட முடியாது. எனவே, கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது. எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை சமாளிக்க வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். அதுவும் உலகக் கோப்பை தொடர் என்றால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்றார் கோலி.
ஜூன் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி எதிர் கொள்கிறது.
அதற்கு முன்பு வரும் சனிக்கிழமை நியூஸிலாந்துக்கு எதிராகவும், 28ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது இந்தியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com