மே.இ. தீவுகள் அணியின் ரிசர்வ் வீரர்களாக பொல்லார்ட், பிராவோ தேர்வு

உலகக் கோப்பைக்கான மே.இ.தீவுகள் அணியின் ரிசர்வ் வீரர்களாக பொல்லார்ட், பிராவோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்கான மே.இ.தீவுகள் அணியின் ரிசர்வ் வீரர்களாக பொல்லார்ட், பிராவோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 30-ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டிக்கு ஏற்கெனவே 15 பேர் கொண்ட அணியை மே.இ.தீவுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 10 ரிசர்வர் வீரர்கள் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் ஓய்வு பெற்ற வீரர் டிவைன் பிராவோ, 3 ஆண்டுகளாக ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்காத பொல்லார்ட் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் அணியான சென்னையில் ஆடி வரும் பிராவோ அதிரடி ஆட்டக்காரர். இவர் கடந்த 2018 அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக 2014-இல் ஒருநாள் ஆட்டத்திலும், 2016-இல் டி 20 ஆட்டத்திலும் ஆடினார். அதே நேரத்தில் பொல்லார்டும் 2016-இல் கடைசி ஒருநாள் ஆட்டத்திலும், கடந்த 2018-இல் கடைசி டி 20 ஆட்டத்திலும் ஆடியிருந்தார்.
மேலும் சுனில் அம்ப்ரீஸ், ஜான் கேம்ப்பெல், ஜோனத்தான் கார்டர், ராஸ்டான் சேஸ், டெளரிச், கீமோ பால், கேரி பியரி, ரேய்மன் ரைஃபர் ஆகியோரும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அணி சரியான விகிதத்தில் அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்வாளர் ராபர்ட் ஹெய்ன்ஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com