கடந்த 1886-இல் கட்டப்பட்ட இந்த மைதானம், வார்க்ûக்ஷயர் அணியின் சொந்த மைதானமாகும். பல்வேறு வரலாற்றுச் சாதனைகள் இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக முதல்தர கிரிக்கெட்டில் பிரையன் லாரா அதிகபட்சமாத 501 ரன்களை விளாசியது இங்கு தான். முந்தைய உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி உள்பட பல்வேறு ஆட்டங்கள் நடந்துள்ளன. எட்பாஸ்டனில் கடந்த 1999 போட்டி அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதிய ஆட்டம் மிகவும் மறக்க முடியாததாகும். தென்னாப்பிரிக்க தரப்பில் ஆலன் டொனால்ட்-லான்ஸ் குளூஸ்னர் ஆகியோர் கடைசியில் ஆடிய நிலையில் அந்த ஆட்டம் சமனில் முடிந்தது.அதிக ரன் சராசரி அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆட்டங்கள்
ஜூன் 19-நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா ஜூன் 26-நியூஸிலாந்து-பாகிஸ்தான்
ஜூன் 30-இங்கிலாந்து-இந்தியா ஜூலை 2-வங்கதேசம்-இந்தியாஜூலை 11-அரையிறுதி.