தடைக் காலம் முடிந்தது: ஆஸி. அணியில் களமிறங்கும் ஸ்மித், வார்னர்

பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்ததால் நடவடிக்கைக்கு உள்ளான ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடைக் காலம் முடிவடைந்த நிலையில்,
தடைக் காலம் முடிந்தது: ஆஸி. அணியில் களமிறங்கும் ஸ்மித், வார்னர்

பந்தை சேதப்படுத்தியதாகப் புகார் எழுந்ததால் நடவடிக்கைக்கு உள்ளான ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடைக் காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் அணியில் பங்கேற்கவுள்ளனர்.
 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நியூஸிலாந்து அணிக்கும், ஆஸி. அணிக்கும் இடையே 3 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
 இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பயிற்சியில் சக வீரர்களுடன் ஸ்மித்தும், வார்னரும் பங்கேற்றனர்.
 ஆஸி. அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கூறுகையில், "ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் அதிரடி ஜாலம் காட்டினர். அவர் நல்ல பேட்டிங் திறனுடன் இருந்து வருகிறார். ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான திறனுடன் உள்ளார். இருவரும் உலகக் கோப்பை தொடரில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்' என்றார்.
 பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், "இருவரும் அணிக்குத் திரும்பிவிட்டனர். அவர்களைத் தேர்வு செய்தது புத்திசாலித்தனமான செயல்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com